|
|
||
|
சங்க இலக்கியங்கள்
சமய இலக்கியங்கள்
காப்பிய இலக்கியங்கள்
|
பிற இலக்கியங்கள்
|
|
|
தமிழ்க் களஞ்சியம்
தமிழ்ப் பணியாளர்கள்
|
|
வானவியல்
ஒளியியல்
|
|
பொதுஅறிவுக் களஞ்சியம்
நீதிக் கதைகள்
விளையாட்டுகள்
|
|
|
ஆன்மீக நூல்கள்
ஆன்மீக செய்திகள்
யோகக் கலைகள்
|
|
|
வேத ஜோதிடம்
ஆரூடங்கள்
|
எண் ஜோதிடம்
|
|
பொது மருத்துவம்
|
|
உடல் நலம்
சமையல் பக்கம்
அலங்காரம்
|
|
வார்த்தை சிரிப்புகள்
|
|
திரைப்படம்
|
தமிழிசை
|
|
ஸ்ரீகுமர குருபரர் நூல்கள் (Kumarakurubarar Books)![]() கந்தர் கலி வெண்பா, கயிலைக் கலம்பகம் ஆகிய நூல்களை இயற்றிய குமரகுருபரர் மதுரைக்குச் சென்றார். அக்காலத்தில் மதுரையில் இருந்து அரசு புரிந்த திருமலை நாயக்கரின் வேண்டுகோளுக்கு இணங்க மதுரை மீனாட்சி அம்மன் பெயரில் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் என்னும் நூலை இயற்றினார். பின்னர் தருமபுரம் ஆதீனத்தில், மாசிலாமணி தேசிகர் என்பவரிடம் சீடராக இருந்தார். அக்காலத்தில் மேலும் பல நூல்களை எழுதிய குமரகுருபரர், காசிக்குப் பயணமானார். அங்கே காசி மடம் என அழைக்கப்பட்ட ஒரு மடத்தை நிறுவிச் சைவ சமயத்தை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதன் கிளையொன்றைத் திருப்பனந்தாழிலும் நிறுவினார். மதுரைக் கலம்பகம், நீதிநெறி விளக்கம், திருவாரூர் நான்மணி மாலை, முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ், காசிக் கலம்பகம், சிதம்பர மும்மணிக் கோவை, சகலகலாவல்லி மாலை என்பன இவர் இயற்றிய பிற நூல்களாகும்.
- க.பா.சக்தி வேலன்
|