|
|
||
|
சங்க இலக்கியங்கள்
சமய இலக்கியங்கள்
காப்பிய இலக்கியங்கள்
|
பிற இலக்கியங்கள்
|
|
|
தமிழ்க் களஞ்சியம்
தமிழ்ப் பணியாளர்கள்
|
|
வானவியல்
ஒளியியல்
|
|
பொதுஅறிவுக் களஞ்சியம்
நீதிக் கதைகள்
விளையாட்டுகள்
|
|
|
ஆன்மீக நூல்கள்
ஆன்மீக செய்திகள்
யோகக் கலைகள்
|
|
|
வேத ஜோதிடம்
ஆரூடங்கள்
|
எண் ஜோதிடம்
|
|
பொது மருத்துவம்
|
|
உடல் நலம்
சமையல் பக்கம்
அலங்காரம்
|
|
வார்த்தை சிரிப்புகள்
|
|
திரைப்படம்
|
தமிழிசை
|
|
மகாகவி பாரதியார் நூல்கள் (Subramaniya Bharathiyar Books)![]() 1882-ம் ஆண்டு டிசம்பர் 11 சின்னசாமி ஐயருக்கும் லட்சுமி அம்மாளுக்கும் எட்டயபுரத்தில் பிறந்த பாரதி (“சுப்பையா” என்று அழைக்கப்பட்டார்) தனது 11-ம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே கவிபுனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். 1897 ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார். 1898 ஆம் ஆண்டு தொழிலில் ஏற்படும் நஷ்டத்தினால் வறுமை நிலையினை அடைந்தார். இதனை எட்டையபுரம் மன்னருக்குத் தெரிவித்து பொருளுதவி வழங்குமாறு கடிதத்தில் கேட்டுக்கொள்கின்றார். பின்னர் எட்டையபுரம் அரண்மனையில் பணி கிடைத்தது. சிறிது காலங்களிலேயே அப்பணியை விடுத்து காசிக்குச் செல்கின்றார். 1898 முதல் 1902 வரை காசியில் தங்கி இருந்தார். பின்னர் எட்டையபுரத்தின் மன்னனால் அழைத்து வரப்பட்டு காசி அரண்மனை ஒன்றினில் பாரதி வாழ்ந்தார். இவ்வாறு ஏழு வருடங்கள் பாட்டெழுதாமல் இருந்த பாரதி 1904 ஆம் ஆண்டு மதுரையில் அவர் எழுதும் பாடல் 'விவேகபானு' இதழில் வெளியாகின்றது. வாழ்நாள் முழுதும் பல்வேறு தருணங்களில் பத்திரிகை ஆசிரியராகவும் மதுரையில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் மற்றும் வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்கவும் செய்துள்ளார்.
- க.பா.சக்தி வேலன்
|